திங்கள், 2 நவம்பர், 2015

கும்பகோணம் பெரியசாமி

“ஏலியன்களால் மூன்றாம் உலகப்போர் நடக்கப்போகுது!”
‘நிலநடுக்கங்கள், கிரகணங்கள் பின்னணியில் வேற்றுக் கிரகவாசிகளான ஏலியன்கள் இருக்கிறார்கள். 2019-ல் ஏலியன்களால் மூன்றாம் உலகப் போர் நடக்கும் ஆபத்தும் இருக்கிறது’ என்ற திகில் கடிதத்தை டைம்பாஸுக்கு அனுப்பியிருந்தார் கும்பகோணத்தைச் சேர்ந்த கே.பெரியசாமி. ஏலியன்களை எண்களோடு தொடர்புபடுத்தி ஆராய்ச்சி செய்துவரும் டெலிபதி நிபுணரான பெரியசாமியை நேரில் பார்த்த அனுபவத்தில் அவர் சொன்ன அத்தனையும் எழுதினால் சுவற்றில் முட்டிக்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவீர்கள் என்பதால், சிலவற்றைத் தருகிறேன்.



‘‘கும்பகோணம்தான் எனக்கு சொந்த ஊர். 3 1/2 வயசு இருக்கும்போது ஒண்ணுக்கிருக்க ஒரு சந்துக்குள்ள போனேன். அரவான் சிலையைப் பார்த்திருக்கீங்களா? அதே மாதிரி ஓர் ஏலியன் அங்கே இருந்த திண்ணையில தலையாட்டிக்கிட்டே உட்கார்ந்திருந்தது. மெதுவா அதுக்குப் பக்கத்துல போய் தொட்டுப்பார்த்தேன். கொழகொழனு பாம்பைத் தொட்ட மாதிரி உணர்ச்சி. பயத்துல காட்டுக்கத்து கத்த ஆரம்பிச்சுட்டேன். அப்புறம் எங்க அம்மாதான்  அந்த ஏலியனை விரட்டிவிட்டாங்க’’ என்று ஆரம்பிக்கும் பெரியசாமிக்கு  வயது 60. திருமணம் ஆகவில்லை. தினம் தினம் நினைத்த நேரத்தில் ‘டெலிபதி’ மூலமாக ஏலியன்களுடன் பேசுவாராம், பார்க்கத் தோன்றினால் கனவு வழியாகப் பார்த்துக்கொள்வாராம்.

‘‘எங்க அம்மா எல்லா கடவுள்கள்கிட்டேயும் சகஜமா பேசுவாங்க. அவங்க மூலமாதான் எனக்கு இந்தப் பிரபஞ்ச சக்தி கிடைச்சுது. அந்தப் பிரபஞ்ச சக்தி மூலமாதான் நான் ஏலியன்ஸ்கூட பேசிட்டு இருக்கேன். ஒருத்தர் மனசுக்குள்ள புகுந்து ‘டெலிபதி’ மூலமா பேசுற வித்தையை எனக்குச் சொல்லிக்கொடுத்தது அவங்கதான். 13, 19-ம் நம்பர் ஏலியன்ஸ் (?!) நான் எப்போ கூப்பிட்டாலும் வந்துடும். 89-ம் நம்பர் ஏலியன் மட்டும்தான் லேட்டாக்கும்’’ என கிறுகிறுக்கவைத்தவரிடம் ‘‘ஏலியன்ஸ் ஏன் வர்றாங்க? எதுக்கு வர்றாங்க?’’ எனக் கேட்டேன்.

‘‘ பூமியை அவங்க எடுத்துக் கணும். இதுதான் அவங்க நோக்கம். 11, 13, 14, 19, 89னு ஏலியன் களுக்குனு சில அடையாள எண்கள் இருக்கு. அதை மனுஷங்க பயன்படுத்தினா, ஏலியன்ஸ் கண்டிப்பா டென்ஷன் ஆகிடும். நேத்துகூட பேப்பரைப் படிச்சீங்களா? அரபு நாடுகளில் நடைபெறும் போருக்காக நாளொன்றுக்கு 58 கோடி செலவுனு சொல்றார் ஒபாமா. தமிழ்நாட்டில் அம்மா மருந்தகங்களுக்காக 58 கோடி ஒதுக்கப்படுகிறதுனு செய்தி வருது. இதனால என்னனு யோசிக்கிறீங்களா, 5+8 = 13. இது ஏலியன்களுடைய அடையாள எண்கள்ல ஒண்ணு. சமீபத்துல சீனாவுல ஒரு கப்பல் கவுந்து 431 பேர் இறந்தாங்க. அந்தக் கப்பலோட நீளம் எவ்வளவு 76 அடி. கூட்டுத்தொகை 13. காணாமல் போனவர்கள் 11 பேர். சம்பவம் நடந்த நேரம் 9 மணி 28 நிமிடம். இதோட கூட்டுத்தொகை 19. எல்லாமே ஏலியன்களுடைய அடையாள எண்கள்தான்’’ என்றவர், ‘‘இன்னொரு விஷயம் சொல்றேன். ஆராய்ச்சி பண்ணிப் பாருங்க’’ என்று தொடர்ந்தார்.



‘‘நிலநடுக்கம், பூகம்பம் போன்ற பேரழிவுகளுக்கு மட்டுமல்ல... சின்னச் சின்ன விபத்துகளுக்குக்கூட ஏலியன்களின் அடையாள எண்கள்தான் காரணமா இருக்கும். உலகத்துல மட்டுமில்ல, இந்தியாவுல, தமிழகத்துல இருக்கிற அரசியல் தலைவர்களுக்குக்கூட அவங்களே அறியாம ஏலியன்கள்தான் வழிகாட்டுதலா இருக்காங்க. அதனால அவங்களுடைய வாயால, அடையாளக் குறியீடுகளைச் சொல்லவெச்சு, அதைப் பார்த்து அவங்களே டென்ஷனாகி, மக்களை அழிச்சுக்கிட்டு இருக்காங்க. இதைத் தடுக்க ஒரே வழிதான் இருக்கு. பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எல்லாம் 11, 13, 14, 19, 89... போன்ற ஏலியன்களின் அடையாளக் குறியீடுகளை அச்சடிக்கக் கூடாது. இல்லைனா, 00 என்ற குறியீட்டை அடிக்கடி பயன்படுத்தணும். ஏன்னா, 00 குறியீடு ஏலியன்களை விரட்டும் குறியீடு’’ என இடைவிடாமல் காதைத் துளைத்துக்கொண்டிருந்த பெரியசாமியிடம் ‘‘ஏலியன்கள் எங்கு இருக்கிறார் கள், என்ன செய்கிறார்கள்?’’ என்று திசை மாற்றினேன்.

‘‘பூமிக்கு அடியில பாறைகள் இருக்குல்ல? அதுல சிலிக்கானும் அலுமினியமும் இருக்கிற பகுதியில்தான் ஏலியன்ஸ் இருக்காங்க. அவங்களைத்தான் நாம நாகலோக மனிதர்கள்னு சொல்றோம். மத்தபடி பறக்கும் தட்டுல இருந்து வர்ற ஏலியன்கள் எல்லாம் இவங்களோட பங்காளிங்க’’ எனப் பதறவைத்துவிட்டுத் தொடர்ந்தார். ‘‘ஆமா தம்பி. 135, 14, 13 குறீயிடுகள் செவ்வாய்க் கிரகவாசிகளுடையது. பூமிக்கு அடிக்கடி வர்றது இவங்கதான். 11 என்பது சந்திரவாசிகளைக் குறிக்கும். 19 எண் கொண்டவர்கள் சனிக் கிரகவாசிகள். இப்படி நிறைய கேட்டகிரி இருக்கு. தீவிரவாதிகளை அதிகப்படுத்துவதுதான் அவங்களோட முக்கியமான டார்கெட். அனேகமா, 2019-ல் மூன்றாம் உலகப் போருக்கான காரணங்களை இப்பவே அவங்க உருவாக்கிக்கிட்டு இருக்காங்கனு நினைக்கிறேன். சொல்றதைச் சொல்லிட்டேன். நான் சொன்னதையெல்லாம் காமெடியா எடுத்துக்காம சீரியஸா இருந்து, ஏலியன்களோட கொட்டத்தை அடக்க வேண்டியது உங்க பொறுப்பு. ஏன்னா

africa

 

உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த ரெபேகா லோலோசோலி கென்யாவின் சம்புரு பழங்குடியைச் சேர்ந்தவர். கடந்த 25 ஆண்டுகளாகப் பெண்கள் மட்டுமே வாழும் கிராமத்தை உருவாக்கி, பெண்கள் சுயசார்புடன் வாழ்க்கை நடத்தப் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

சம்புரு பழங்குடிகளில் பெண் களுக்கு உரிமைகளோ மதிப்போ கிடையாது. ஆண்கள் ஆடு, மாடுகளை வரதட்சணையாகக் கொடுத்து, பெண்களைத் திருமணம் செய்துகொள்வார்கள். ஒரு பொருளைப் போன்று வாங்கப்பட்ட பெண்கள், ஆண்களுக்குக் கீழ் அடிமையாக வாழ்க்கை நடத்த வேண்டும். பெண்களுக்குக் கல்வி கிடையாது. வேலை செய்து சம்பாதிக்க முடியாது. கட்டாயத் திருமணம், பெண் உறுப்புச் சிதைப்பு போன்றவற்றில் இருந்து தப்பிக்க முடியாது.

ரெபேகா பள்ளிக் கல்வி பயின்றவர். 18 வயதில் திருமணம், 5 குழந்தைகள். பிரிட்டன் ராணுவ வீரர்கள் ரெபேகா உட்பட 15 பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தனர். பலாத்காரத்தைக் காரணம் காட்டி, ரெபேகாவை விற்க முடிவெடுத்தார் அவருடைய கணவர். இனி ஒரு நிமிடம்கூட இங்கே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்தார் ரெபேகா. அங்கே பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான பெண்களைக் கணவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை. சிலர் உணவின்றி இறந்துபோவார்கள். சிலர் கழுதைப்புலிகளுக்குப் பலியாவார்கள். எஞ்சியிருப்பவர்கள் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு, மிக மோசமாக நடத்தப்படுவார்கள். பாதிக்கப்பட்ட பெண்களை ஒன்றுதிரட்டிக்கொண்டு கிராமத்தை விட்டுக் கிளம்பினார் ரெபேகா.

தன்னந்தனியே

ஒற்றுமை என்று பொருள்படும் ‘உமோஜா’என்ற பெண்கள் அமைப்பை ஆரம்பித்தார். பொட்டல் நிலத்தில் தங்குவதற்கு ஓர் எளிமையான வீட்டைக் கட்டினார்கள். பழங்குடி உணவுகளைச் சமைத்து விற்க ஆரம்பித்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு உணவு விற்பனை இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாரம்பரிய நகைகள், கைவினைப் பொருட்கள் செய்து சுற்றுலாப் பயணிகளிடம் விற்றனர். இந்தத் தொழில் சூடு பிடித்தது. அதோடு பழங்குடி நடனம், பாட்டு என்று கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.

கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பிவந்த பெண்கள், கணவர்களால் கைவிடப்பட்ட பெண்கள், பெண் உறுப்புச் சிதைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த பெண்கள், கணவனின் வன்முறைகளைத் தாங்க முடியாத பெண்கள், படிக்க அனுமதி கிடைக்காத பெண்கள், பாலியல் பலாத்காரத்துக்குப் பலியான பெண்கள் என்று ஏராளமானவர்கள் உமோஜாவை நாடிவந்தனர். அனைத்துப் பெண்களையும் அன்புடன் அரவணைத்துக்கொண்டார் ரெபேகா.

தாக்குதல் தொடுக்கும் ஆண்கள்

பெண்கள் தனியாக இயங்கு வதையும் சம்பாதிப்பதையும் பழமையில் ஊறிய பழங்குடி ஆண்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதுபோல கிராமத்துக்குள் நுழைந்து தகராறு செய்தனர். இடத்தைக் காலி செய்ய வற்புறுத்தினர். சொந்தமான இடமாக இருந்தால் யாரும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தார் ரெபேகா.

பெண்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியைச் சேமித்தனர். தாங்கள் வசிக்கும் இடத்தைச் சொந்தமாக வாங்கினார்கள். நிலத்தைச் சுற்றி வேலி அமைத்தார்கள். சுற்றிப் பார்க்கவோ, தங்கள் பொருட்களை வாங்கவோ ஆண்கள் வரலாமே தவிர, பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் உள்ளே ஓர் ஆணும் அடி எடுத்து வைக்கக் கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தனர். கூட்டம் கூட்டமாக ஆண்கள் வந்து தாக்குதல் நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அங்கிருக்கும் பெண்கள் ஒற்றுமையாக நின்று அனைத்தையும் சமாளித்து வருகிறார்கள்.

கல்வி, மருத்துவம், சட்டம்

கல்வி அறிவே தங்கள் நிலையை மாற்றும் என்பதை உணர்ந்தவர்கள், தங்கள் சேமிப்பில் ஒரு பள்ளியைக் கட்டினார்கள். இரண்டு ஆசிரியர்களை நியமித்தார்கள். இன்று உமோஜா குழந்தைகள் மட்டுமின்றி, அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகளும் இங்கே படிக்கிறார்கள். இரண்டு வேளை சூடான உணவு வழங்கப்படுகிறது.

சுகாதாரத்துக்காக ஒரு மருத்துவமனையையும் உருவாக்கினார்கள். சுகாதாரம், ஆரோக்கிய உணவு, ஹெச்ஐவி குறித்துப் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கப்படுகிறது. சட்டம் குறித்தும் பெண்களுக்கான உரிமைகள் குறித்தும் எடுத்துச் சொல்லப்படுகிறது. சம்புரு பழங்குடிகளிலேயே நீதிமன்றம் சென்று விவாகரத்து கோரிய முதல் பெண்ணாக இருக்கிறார் ரெபேகா.

அறுபது பெண்களும் 200 குழந்தை களுமாக கிராமம் பெருகிவிட்டது. நச்சாமி பெண்கள் குழு என்று பிரித்து, அவர்கள் தனி கிராமத்தில் இயங்கி வருகின்றனர். கோழிப் பண்ணைகளின் மூலம் முட்டைகளையும் இறைச்சியையும் விற்பதுதான் இந்தப் பெண்களின் முக்கியத் தொழில்.

53 வயது ரெபேகா 25 ஆண்டுகளாகப் பெண்கள் முன்னேற்றத்துக்காகக் கடினமாக உழைத்துவருகிறார். இன்று சர்வதேச அளவில் அவருக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அவருடைய திட்டங்களுக்குப் பல்வேறு நாட்டுத் தன்னார்வத் தொண்டு அமைப்புகளிடம் இருந்து நிதியும் கிடைத்துவருகிறது.

“பெண் என்றைக்க