வணக்கம்,
நான் நேரில் பார்த்த ஒரு எளிய, சாமானிய மனிதரைப்பற்றிய நிறைய நிஜங்களும், குறைய எனது கற்பனையும் தான் இந்தக்கட்டுரை.
நன்றி.
"உயர் திரு. ஊமையன் ஐயா"
பி.காம் படித்துவிட்டு, திருப்பூர்,மதுரை,துபாய்,மறுபடி மதுரை,மறுபடி துபாய்,ராமநாதபுரம், இப்படி எங்கேயும் மனசுக்குப்பிடிக்காத, மனசோடு ஒட்டாமல் வேலை செய்துவிட்டு,கடைசில திருச்சிக்கு வந்து, அடுத்து என்னத்த பண்ணி பெருசா சாதிக்கலாம்னு யோசித்து யோசித்து மூளையைப்போட்டு கசக்காம, அத தூக்கி ஒரு மூலையில போட்டுட்டு, ஆட்டோ ஓட்டலாம்னு முடிவு செஞ்சு கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த நேரம் அது,,,,,,
திருச்சி காந்தி மார்க்கெட்,வாரத்தில் ஆறு நாட்களும் பரபரவென இயங்கிக்கொண்டிருக்கும் இடம், நான்கைந்து சாலைகளின் ஒருமித்த சங்கமம், மார்க்கெட்டை சுற்றி ஐந்து ஆட்டோ ஸ்டாண்டுகள் இருக்கும் அதில் ஒன்று தான் எங்களோடது, மற்றவைகள் அனுமதி பெற்றவை, எங்களோடது மட்டும் அனுமதி பெறாதது. ஒரு நான்கு ஆட்டோ மட்டுமே அங்கே நிறுத்தி ஓட்டிக்கொண்டிருந்தோம். டிராஃபிக் ஜார்ஜன்ட் வண்டி வருகிற சத்தம் கேட்டால் ஆளுக்கொரு திசையில் ஓடிடுவோம்.
காலைல வந்து வண்டில உக்கார்ந்து பேப்பர் படிப்பது, சவாரி ஏதும் வந்தால் அவர்களோடு பேரம்பேசுவது, அங்கு வரும் லாரி டிரைவர்கள், அவர்களின் வெளி மாநில பயணத்தின் போது உண்டான அனுபவங்கள் பற்றிய பகிர்கள், மொத்த வியாபாரி, சிறு வியாபாரி, விஷேசங்கட்கு காய்கறி வாங்கவருபவர்கள், அவர்களின் பேரம் பேசும் பாங்கு,போக்குவரத்தை சரிசெய்ய முடியாமல் தவித்து, பிறகு அந்த தவிப்பின் பலனாக(கையூட்டு) ஒவ்வொரு வண்டிக்கும் பத்து பத்து ரூபாய் என்று ஓடி ஓடிச்சென்று அவர் வசூல் வேட்டை நடத்தும் விதம் என்று சின்ன சின்ன விஷயத்தையும் ரசித்தேன், அந்தச்சூழல் எனக்கு புதிதாக இருந்தது,மனசுக்கு ரொம்ப பிடித்திருந்தது.
அங்கே தான் எங்களது ஆட்டோக்களுக்கு பக்கத்திலேயே ஒரு டிரை சைக்கிள் (மூன்று சக்கர தள்ளுவண்டி) நிறுத்தி பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர், அவர் பெயர் அங்கே யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. எல்லாரும் அவரை 'ஊமையன்' என்றே கூப்பிட்டு பழக்கப்பட்டுவிட்டார்கள் போல, அவரும் தனது சொந்த பேரை மறந்துவிட்டு ஊமையா என்று யாராவது கூப்பிட்டால் அடிச்சு பிடிச்சு ஓடிவருவார். அவருக்கு வயது ஒரு60 முதல் 65 இருக்கலாம், ஒல்லியான தேகம், நேரா போய் முதுகில் கொஞ்சம் வளைந்திருக்கும், சாலட்&பெப்பர் தலை மடி, ஒட்டிப்போன கன்னம், ஓடி ஓழிந்து கிடக்கும் இரு கண்கள், எப்போதும் ஒரு துண்டு பீடியைப் பற்றிக்கொண்டிருக்கும் உதடுகள், வேட்டி என்ற என்ற பெயரில் இடுப்புக்கு மேலே சுருட்டி வைக்கப்பட்ட ஒரு வஸ்து,அதுக்குள்ளே ஒரு பட்டாபட்டி டவுசர். இவை தான் திரு.ஊமையன் அய்யாவின் உடமைகள். வீடு எங்கே, சொந்தக்காரங்க யார் எதும் அவரைப்பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை, அவரிடம் அங்கே யாரும் பேசுவதில்லை, நீங்களாம் எனக்கு ஒரு ஆளே இல்லை என்ற ரீதியில் வேறொரு கிரகத்தில் இருப்பது போல உக்கார்ந்திருப்பார். நான் அந்த இடத்திற்கு புதிதாக வந்திருப்பதால் என்னைப்பார்க்கும் போது மட்டும், வா னு வரவேற்பதைப்போல லேசா தலையசைத்து சிரிப்பார். நானும் அவருடைய வரவேற்பை ஏத்துக்கிட்டதுக்கு அடையாளமா தலையை முன்னால் சாய்த்து சிரித்துக்கொள்வேன்.
திருச்சிக்கு நான் புதுசு, ஆக புது இடம், அறிமுகமில்லாத மனிதர்கள், ஆடடோ ஓட்ட வருவதற்கு இரண்டு நாளுக்கு முன்பு தான் அதை ஓட்டவே கத்துக்கிட்டேன், இன்னும் கூட சரியாக ஓட்டத்தெரியாது, எந்த இடத்திற்கு எப்படி போகணும் எவ்வளவு வாடகை பேசணும் அதும் தெரியாது, இப்படி சுழலில் அங்கே நான்,,,,,,,
ஆரம்பத்தில் சவாரி கேட்டு வரவங்க கிட்ட குத்துமதிப்பா ஒரு வாடகை கேட்பேன், நான் எவ்வளவு கேட்டாலும் அதிலிருந்து பத்தோ இருபதோ குறைச்சா தான் அவங்களுக்கு மனசு சமாதானம் ஆகும் போல, சிலர் நியாயமான வாடகை தான் னு நினைச்சு குடுத்திடுவாங்க, சிலர் என்னப்பா இவ்ளோ ஜாஸ்தி கேக்குறே னு வாங்க,, அய்யய்யோ ரொம்ப ஜாஸ்தியா கேட்டுட்டோம் போல னு நினைச்சு(ஓரளவு நியாயமாத்தான் கேட்டிருப்பேன் உண்மையில்) சரி நீங்களா ஏதாவது பாத்து குடுங்கனு சொல்லிடுவேன்.
சிலர் நான் பேசுறத வச்சே " புதுசா ஆட்டோ ஓட்டுறீஙங்களானு கேட்டுடுவாங்க, வழக்கமான ஆட்டோகாரங்க பேச்சுக்கும், நான் பேசுறதுக்கும் வித்தியாசம் தெரியும் போல,,,,, பொதுவா பெண்கள் தான் சவாரி கேட்டு வருவார்கள். ஆரம்பத்தில் ஒரநாள் ரெண்டு பெண்கள் வந்து சஞ்சீவ் நகர் போலாமா னு கேட்டாங்க, நானும் சரி போலாமே னு சொல்லிட்டேன். ஆனா எவ்ளோ தூரம் இருக்கு எவ்ளோ வாடகை கேட்கலாம் னு எதும் தெரியலை, வேற ஆட்டோக்காரங்க யாருமில்லை, ஊமையன் ஐயா மட்டும் கொஞ்ச தூரமா உட்காந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
வாடகை எவ்வளவு னு கேட்டாங்க, நான் தோராயமா ஒரு 60 ருபா குடுங்க னு சொன்னேன், உடனே அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் மாத்தி மாத்தி பாத்துக்கிட்டு வண்டில ஏறிட்டாங்க. கொஞ்சம் தூரம் போனதும் ஒருத்தர் கேட்டாங்க "ஆட்டோ புதுசா ஓட்டுறீங்களா" கண்டுபிடிச்சிட்டாங்கடா னு மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டே ஆமா எப்டி கண்டுபிடிச்சிங்க னு நான் கேட்டேன், " இல்ல வழக்கமா வேற எல்லாரும் 70,80ரூபா கேப்பாங்க, நீங்க 60 தான் கேட்டீங்களா அதான் னு சொன்னாங்க.ஆஹா வட போச்சே னு மனசில நெனச்சுக்கிட்டேன். வீட்ல போயி இறங்கினதும் 80 ரூபா குடுத்து வச்சுக்கோங்க, வாடகையை பத்தி இனிமே தெரிஞ்சு வச்சுக்கோங்க சொல்லி அனுப்பிவிட்டாங்க, புதுசா ஒட்டறோம்னு தெரியாம இருக்க கொஞ்சம் மெனக்கிடுவேன்,பத்து இருபது குறைச்சு தான் கேப்பேன், ஆனாலும் அதுவே காட்டிக்கொடுத்திடும். பின்பு அவர்கள் எனக்கு ரெகுலர் கஸ்டமர் ஆகிப்போனது வேறு கதை.
ஊமையன் ஐயாவோடு அப்போது பழக்கம் ஏற்படவில்லை, அவரது நடவடிக்கைகளை தூரமாக நின்று வேடிக்கை பார்ப்பதிலேயே அலாதி இஷ்டமாகியது. அவரும் என்னை கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார் என்பது பின்னால் தெரிய வந்தது.
அவரிடம் வண்டி கேட்டு வருபவர்களிடம் அவர் பேரம் பேரம் விதமே பயங்கர வேடிக்கையா இருக்கும்.நியாயமான வாடகைதான் கேட்பார், அவர் எவ்வளவு கேட்டாலும் அதில் பாதியைக்குறைத்து தான் தருவார்கள், இவர் தோற்றத்தைப்பார்த்து இது போதும் இவருக்கு என்று எண்ணிக்கொள்வார்களோ போல?!?!! அந்த மாதிரி ஆட்களை இவரும் விடமாட்டார், 'ஒரு பத்து ரூபா சேத்துக்குடு' இது தான் அவரோட ஏக வசனம். சொல்லிக்கிட்டே அவங்க கன்னத்தையும் நாடியையும் தொட்டு தடவி மறுபடி அந்த வசனத்தை பேசுவார். அதுக்காக அவரைத்தெரிந்தவர்கள் யாரும் அவரிடம் பேரம் பேசுவதில்லை. தெரியாமல் யாரும் வந்துட்டா தான் இந்தவேடிக்கை எல்லாம்.
இன்னொரு நாள், ஒரு குடும்பமாக வந்தார்கள், ஒரு வாழைத்தாரை தூக்கிக்கொண்டு, அதாவது ஒரு இளவயது பெண், அம்மா மற்றும் அப்பா. மிளகுப்பாரைக்கு வரீயா தம்பி னு கேட்டார். ஆஹா மிளகுப்பாரைனா பெரிய சவாரியாச்சே,கேள்விப்பட்டிருக்கேன், ஜங்சன் பஸ்ஸ்டாண்ட தாண்டி போகணும், ஆனா எவ்வளவு வாடகை பேசலாம் தெரியாது, போலாம் சார் னு சொல்லிட்டு சுத்தி
சுத்தி பார்த்தேன் ஊமையன் ஐயா ஓரமா உட்கார்ந்து பீடி குடிச்சிட்டிருந்தார். ஐயா மிளகுப்பாரைக்கு சவாரி வந்திருக்கு வாடகை எவ்ளோ கேட்கலாம் னு கேட்டேன். 180 ரூபா கேளு அப்போ தான் 160,170 குடுப்பாங்கனு சொல்லிவிட்டார். நான் வந்து அவர்களிடம் 160 கேட்டேன், சரினு ஏறிட்டாங்க. அவங்க கிட்ட ஏனோ சொல்லணும்னு தோணுச்சி சொல்லிட்டேன். "புதுசா தான் வண்டி ஓட்டறேன் நீங்க தான் வழி சொல்லணும்" நான் இப்படி சொன்னதும் அவங்களுக்கு ஏதோ ஒரு வித சந்தோசம், அந்தப்பொண்ணு எனக்கு வழி நெடுக வழி சொல்றதும், அம்மா அப்பா ரெண்டு பேரும் என்னைப்பற்றிய விசாரனையிலுமாக வீடு வந்திடுச்சு. ராத்திரி எட்டரை இருக்கும், அந்த அம்மா கேட்டாங்க 'திரும்பி போயிடுவியாப்பா?' அதெல்லாம் போயிடுவேன் னு நான் சொல்ல, இல்ல இவ்ளோ தூரம் உள்ளார வந்திருக்கோம் அதான் நீ திரும்பி போக கஷ்டமா இருக்குமே, ராத்திரி நேரம் வேரனு சொல்லிட்டே மூனு பேரும் வீட்டுக்குள்ளே போயிட்டு திரும்பி நாலு பேரா வெளில வந்தாஙக, அந்த நாலாவது ஆள் அவங்க பையன் போல , 'தம்பி நீ போயி ஆட்டோக்கார அண்ணன ஜங்சன் வரைக்கும் விட்டுட்டு வந்திடு'னு அந்த அம்மா சொல்ல, எனக்கு தர்மசங்கடமும் அதே நேரம் சந்தோசமாகவும் இருந்தது, சவாரி ஏத்திக்கிட்டு வந்தவனையே திரும்ப கொண்டுவந்து விட நினைத்த அவர்களின் எண்ணம் நெகிழச்செய்தது. ஆனாலும் கடைசிவரை நான் வேண்டாமென்று மறுத்துவிட்டேன்.
இதுபோல ஓரிரு சம்பவங்களுக்குப் பின்பு தான் ஊமையன் ஐயாவுடன் மெதுவாக பழக்கம் ஏற்படுத்திக்கொண்டேன். என்னோடு வேற யாராவது இருந்தா, யாரோ எவரோ மாதிரி வேற திசை பார்த்து உட்கார்ந்திருப்பார். யாருமில்லைனா மட்டும் பக்கத்தில் வருவார், என்னிடமிருந்து பேப்பரை கேட்டு படிப்பார். அவரோட கண்கள் எதையோ தொலைத்து விட்டு தேடுவதைப்போலவே இருக்கும், வாய் திறந்து என்னிடம் ஏதோ சொல்ல வருவதைப்போல தோன்றும், ஆனா பேசமாட்டார். ஏதோ ஒரு தயக்கம் அவரைத்தடுத்தது. ஆனால் என்னிடம் ஏதோ சொல்ல நினைக்கறார் என்பதில் மட்டும் நான் நம்பிக்கை இழக்கவில்லை.
சில நேரத்தில், பொழப்பே இல்லை டீ குடிக்க 5 ரூபா குடுக்குறியா? னு கேட்பார், பின் நாட்களில் அவர் கேட்காமல் நானே வாங்கிக்கொடுக்கப் பழகிவிட்டேன். அவரைப்பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள யாரிடமாவது விசாரித்தால், எல்லாரிடமும் ஒரே பதில் தான் வந்தது, ஊமையனா, அவனப்பத்தி எதுக்கு கேக்குறே அவன் வருவான் போவான் வேற ஒன்னும் தெரியாது. சிலர் சொன்னார்கள் "வண்டி நல்லா ஓடிச்சுனா தண்ணிய போட்டுட்டு எங்கேயாவது படுத்துருப்பான்" இவை தான் அவரைப்பற்றி அதிகமானோர் சொன்னது.
மற்றொரு நான் ஆட்டோல உட்கார்ந்து பேப்பர் படிச்சிட்டு இருந்தேன், ஐயா பக்கத்தில கீழ உட்கார்ந்திருந்தார். மற்றவர்கள் அப்டியே கொஞ்சம் தள்ளி நின்னு பேசிட்டு இருந்தாங்க. அந்த இடத்தில ஒருத்தர் கொஞ்சம் இளநீர் வைத்து வியாபாரம் செஞ்சிட்டு இருந்தார். அதை சுத்தி அங்கே வேலை செய்யும் ஐந்தாறு ஆளுங்க பேசிட்டு இருந்தாங்க, அங்கே ஒரு பெண் அவங்களோட பிள்ளைக்கு இளநீர் வாங்கிக்கொடுத்துக்கொண்டிருந்தார், நான் பேப்பர் படிப்பதில் மும்முரமாக இருந்தேன்.
அப்போ திடீரென்று அந்தப் பெண், பிள்ளைகிட்ட " சீக்கிரம் குடிச்சுத்தொலை பொம்பள பிள்ளை இந்த இடத்துல நிக்கிர மாதிரியா பேசுராங்க!!!! அவங்க வீடுகள்லலாம் பொம்பளை பிள்ளைகளுக்கு முன்னாடி இப்டி தான் பேசுவாங்களா" னு சொன்னதும், சட்டென்று ஊமையன் அய்யாவும் பெருங்குரல்ல பேச ஆம்பிச்சுட்டார். " ஏன்டா ஈனப்பயலுகளா, நானும் அப்போ இருந்து பாத்துக்கிட்டு தான் இருக்கேன், ஒரு பொம்பளப்பிள்ளை நிக்குதுனு கூடத்தெரியாம இப்டி வாய்க்கு வந்த கெட்ட கெட்ட வார்த்தையா பேசுறீங்களேடா, ஏன்டா ஒரு கோபத்திலயோ இல்ல சண்டை சல்லு போடும்போதோ ஏதே ரெண்டு கெட்ட வார்த்தை வாய்ல வரலாம், இப்படி சாதாரணனமாக பேசும்போது கூட இப்படி பேசுறீஙாகளேடா" னு அவர் பேசபபேச அங்கே யாரும் வாய் தொறந்து பேசவே இல்லை எல்லாரும் கப்சுப்னு ஆயிட்டாங்க.
எப்டி இவருக்கு இந்தக்கோபம் வந்தது, அங்கே யாருக்குமே வராத அந்த அக்கரை அந்த மனிதனுக்குள்ளிருந்து வந்தது எப்படி? ஐயாவின் கோபம் நியாயமானது, எல்லாருக்கும் வரவேண்டியது தான். காரணம் திருச்சியில் குறிப்பா மார்க்கெட் பகுதியில் உள்ளவர்கள் வாயத்தொறந்து பேசினாளே வார்த்தைக்கு வார்த்தை படுமோசமான கெட்டவார்த்தை தான். ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும் ஒரு புனா சேர்த்துக்கிடுவாங்க, உதாரணத்துக்கு நேரமே சரியில்லைனு சொல்லுறதுக்கு கூட "நேரப்பு(,,,,,,,) யே சரியில்லைனு தான் சொல்லுவாங்க. இது என்ன பெரிய விஷயமானு கூட சிலருக்கு தோணலாம், ஆமா பெரிய விஷயம் இல்லை தான், ஆனா இடம் பொருள் ஏவல்னு ஒன்னு இருக்கு தானே. நம்ம அம்மா அக்காவ பக்கத்தில வச்சுக்கிட்டு இப்டி பேசுவோமா??
இந்த சம்பவத்துக்கு பிறகு ஊமையன் ஐயாவைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்ற என்னோட ஆர்வம் கூடிப்போனது. ஒருநாள் அவரைப்பின் தொடர்ந்து செல்லலாமென்று முடிவெடுத்து ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டேன். இரவு எட்டு மணி இருக்கும், அவர் தள்ளுவண்டியை மிதித்துக்கொண்டே சென்றார், அவருக்குத்தெரியாமல் நான் பின்னால் நடந்து சென்றேன். கொஞ்ச தூரம் போனதும் அங்கிருந்த ஒரு ஹோட்டலுக்குள்ள போய் பெரிதாக ஒரு பார்சல் வாங்கிட்டு வெளில வந்தார், நான் அவரைப் பின் தொடர்வதை அவர் தெரிந்துகொண்டார் போல நேராக மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த என்னிடமே வந்து "எங்க வீட்டக்கு வரீயா"னு கேட்டார். எனக்கு என்ன சொல்லுவதென்றே அப்போ தெரியலை, அவரைப்பத்தி ஏதாவது தெரிந்துகொள்ள எனக்கிருந்த ஆர்வத்தை எல்லாம் மறைத்துக்கொண்டு "இல்ல பரவாயில்லயா இன்னொரு நாள் வாரேனு சொன்னேன்(மனசில்லாமல்). ஆனா அவர் என்னை விடவில்லை, கையைப்பிடித்து இழுத்துச்சென்று அவர் வண்டியில உட்காரச்சொன்னார். இல்ல நான் நடந்தே வரேனு சொன்னேன், இல்லப்பா கொஞ்சம் தூரமா இருக்கு வீடுனு சொல்லி வண்டியில் ஏறச்சொன்னார், நானும் ஏறிக்கொண்டேன். வண்டி ஈ.பி ரோட்டில் செல்கிறது, கருவாட்டுப்பேட்டை கடந்து, முருகன் டாக்கீஸ் கடந்து, மகாராணி தியேட்டர் கடந்து. நேராகப்போனால் குறிஞ்சி காலேஜ், அங்க போகாமல் ஜான் தோப்பு போகும் வழியில், அதிகம் வீடுகள் இல்லாத காடு போன்ற ஒரு வெளி, அங்கே நான்கைந்து வீடுகள், நாங்கள் ஒருத்தரோடு ஒருத்தர் சண்டை என்ற ரீதியில் தனித்தனியாக இருந்தது, அதில் வலப்பககம் ஓரத்தில் இருந்த வீட்டு முற்றத்தில் போய் வண்டி நின்றது.
கார்த்தீ னு ஒரு குறல் கொடுத்தார், தாத்தா வந்துட்டாரு னு கத்திக்கிட்டே 12,13வயதுள்ள ஒரு சின்னப்பையன் வீட்டுக்குள்ளிருந்து ஓடிவந்தான், என்னைப் பார்த்ததும் அவனது சந்தோசம் சட்டென்று குறைந்து நின்றான், அவனுக்குப் பின்னால் மூன்று பெண் பிள்ளைகள் வந்தார்கள்,அவர்களுக்கு வயது முறையே 13,15,16 இருக்கலாம், அவர்களும் என்னைப்பார்த்ததும்உற்சாகம் குறைந்து தயங்கி நின்றார்கள்.
இப்போ ஊமையன் ஐயா பேசினார் "அது ஒன்னுமில்லப்பா, இதுங்களுக்கு என்ன விட்டா வேற யாரயும் தெரியாது, இங்க வேற யாரும் வரதுமில்ல, நீ தான் முதல் தடவையா வந்திருக்கே அதான் ஒன்ன பாத்ததும் தயங்குதுக" ஏத்தா பிள்ளைகளா நம்ம அண்ணன் தான் சும்மா வாங்க னு எல்லாரையும் பக்கத்தில கூப்பிட்டு என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார், தொடர்ந்து அவர்களையும் எனக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். "இவென் கார்த்தி எட்டாப்பு படிக்கிறான், இது பெரியது தெரசா பதினொன்னாப்பு படிக்குது, இது திவ்யா பத்தாப்பு படிக்குது, அப்பரம் இது ரோசி கார்த்தி கூட எட்டாப்பு படிக்குது. பெரிய பொண்ணு மட்டும் வணக்கண்ணே னு சொன்னது, மற்றவர்கள் லேசா சிரிச்சாங்க.
அறிமுக படலம் முடிந்து என்னை வீட்டுக்குள் கூட்டிச்சென்றனர். எனக்கும் சேர்த்துதான் ஹோட்டலில் புரோட்டா பாார்சல் வாங்கியிருக்கிறார், சாப்பிடச்சொல்லி வற்புறுத்தினார்கள், இன்னொரு நாள் சாப்பிடுறேனு சொன்னேன், அவர் "இன்னொரு நாள் எப்போ நீ வரபோறே இன்னிக்கு ஒருநாள் தானே சும்மா சாப்பிடுப்பா" அதிகாரத்தை எதிர்க்கலாம் ஆனால் அன்பை எதிர்க்க கூடாதென்று சாப்பிட்டேன். சரியாக சாப்பிட்டு முடிக்க கரண்ட் கட் ஆயிடுச்சி. மெழுகுவத்தி இருந்தா சீக்கிரம் ஓடிப்போய் எடுத்திட்டுவாத்தா ரோசி என்று குறல் கொடுத்தார் கையில் தீக்குச்சியை எரியவிட்டபடி,,,,,, மெழுகுவத்தி நேத்தே தீந்திடுச்சு தாத்தா என்றது தெரசாவின் குறல், அப்போ நான் போயி கடைல வாங்கிட்டு வந்திடுறேனு சொல்லி கிளம்பினார், நானும் கூட வாரேனு நானும் எழுந்திரிக்க,,,, இல்லப்பா வெளில ஒரே இருட்டா இருக்கு நீ இரு நான் போயிட்டு வாரேனு தாத்தா கிளம்பிட்டார்.
அவர்கள் நாலு பேரும் என்னைச்சுற்றி உட்கார்ந்து கொண்டு என்னைப்பற்றிய விசாரனையில் இறங்கினார்கள். உங்க வீடு எங்கண்ணா இருக்கு, நீங்க தாத்தா கூடதான் வேலை பாக்குறீங்களா, உங்களுக்கு குழந்தை இருக்கா, ஒருநாளைக்கு கூட்டிட்டு வரீங்களா னு ஆளுக்கொளு கேள்வியா கேட்டுக்கிட்டாங்க. எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு நான் ஒரு கேள்வி கேட்டேன், உங்க அம்மா அப்பா எங்கே இருக்காங்க? இங்கே லீவுக்கு வந்தயுக்கீங்களா? ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு தெரசா பேசியது!!! இல்லண்ணா நாங்க நாலு பேருமே அனாதைங்க,,,,,, சட்டென்று உயிர் போய் திரும்பியது போலிருந்தது!!, தெரசா தொடர்ந்து பேசியது,,,,
தாத்தாவோட சொந்த ஊரு ராமநாதபுரம் பக்கம் ஒரு கிராமம்,பேரு தெரியலை, அவருக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. 30 வருஷத்துக்கு முன்னாடியே இங்கே வந்துட்டாங்ளாம், பிள்ளைங்க ரெண்டு பேருக்குமே கல்யாணம் முடிஞ்சுது, ஆனா அவ்வளோ ஒன்னும் தொடர்பு இல்லை. தாத்தாவும் பாட்டியும் வருஷ வருஷ திருவிழாவுக்கு ஊருக்கு போவாங்கலாம். பத்து வருஷத்துக்கு முன்னாடி அந்த மாதிரி போகும் போது தான் ஒரு ஆக்ஸிடெண்ட் நடந்திருக்கு, மதுரையைத்தாண்டி ஒரு இடத்தில. அதுல தாத்தாவும் பாட்டியும் வந்த பஸ்ஸும், எங்க ஆசிரமத்திலிருந்து நாங்க ஒரு 16 டூர் போன வேனும் தான் மோதிடுச்சு. எங்க நாலு பேரைத்தவிர வேன் இருந்த மற்ற எல்லாருமே இறந்துட்டாங்க, எங்க ஆசிரமத்தோட கரஸ்பாண்டன்ட் ம் கூட இறந்திட்டாங்க, ஆஸ்பிடல்ல இருந்து எங்களை கூட்டிட்டு போக யாருமே இல்லை, ஏற்கனவே அனாதையான நாங்க மறுபடி ஒரு வாட்டி அனாதையா நின்னுட்டு இருந்தோம். அங்கே தான் அதே ஆக்ஸிடெண்ட்ல பாட்டிய பரிகொடுத்திட்டு தாத்தாவும் உக்கார்ந்திருந்தார், எங்களோட நிலமைய பார்த்துட்டு அப்பவே எங்கள அங்கிருந்து கூட்டிட்டு வந்துட்டார்.
அப்போதிலிருந்து இன்னைக்கு வரைக்கும் எங்கள அவ்ளோ நல்லா பார்த்துக்கிட்டு இருக்கார். இப்போ நானும் திவ்யாவும் ஸ்கூல் முடிஞ்சு வந்து ஒரு ரெண்டு மணி நேரம் அப்பள கம்பெனிக்கு அப்பளம் தேய்ச்சு கொடுக்கிற வேலைக்கு போரோம். அடுத்த வருஷம் ரோசியக்கூட சேர்த்துக்கிறதா சொல்லிருக்காங்க. இப்ப ஒருநாளைக்கு நாங்க ஒரு 150 ரூபாய் கொண்டு வருவாம், தாத்தா ஒரு 150,200 கொண்டு வருவார். ஏதோ எங்க பொழப்பு ஓடிட்டு இருக்கண்ணானு சொல்லி முடித்தது தெரசா.
மீணடும் ஒரு இரண்டு நிமிட அமைதி
"தாத்தா உங்ககிட்ட என்ன சொல்லி இங்க கூட்டிட்டு வந்தாங்க அண்ணா"
தெரசா கேட்டது. ஒண்ணும் சொல்லலைப்பா சும்மா தான் வா னு சொல்லி கூட்டிட்டு வந்தார் னு நான் சொன்னேன். "இல்ல தாத்தா யார்கிட்டயும் அவ்ளோ பேசமாட்டார், உங்க கிட்ட தான் பேசுவார் போல, அதான் நீங்க கொஞ்சம் சொல்லுங்கண்ணா, சில நேரம் குடிச்சிட்டு வர்ரார், முன்னாடி எல்லாம் குடிக்கவே மாட்டார். ஏதோ கவலைப்படுறார் போல, இதுங்கள எப்படி கரை சேர்க்க போறோம்னு நினைச்சு. அவருக்கு ஏதாச்சும் ஒண்ணு ஆனதுனா நாங்க என்னண்ணா பண்ணுவோம்?!? இனிமே அவர் வேலைக்கு கூட போக வேணாம் வீட்லயே இருந்தா போதும். ஆனா கேட்கமாட்டேன்கிறார். நீங்க சொல்லுங்கண்ணா ப்ளீஸ,,,,,,, கவலைப்படாதீங்க அதெல்லாம் ஒண்ணும் ஆகாது நானும் சொல்றேன்னு சொல்லி எழுந்திரிக்க முயன்றேன் போன கரண்ட் திரும்ப வந்தது,, கடைக்குப்போன தாத்தாவும் திரும்பி வந்திருந்தார்.
அங்கிருந்து விடைபெற்று கிளம்பினேன், மனசு மட்டும் மறுத்தது அந்த இடத்தை விட்டு விலக!!! அன்று இரவு வெகுநேரம் தூக்கம் வரவே இல்லை,,எண்ணமெல்லாம் அந்தப்பிள்ளைகளையும், தாத்தாவையும் சுற்றி சுற்றி வந்தது, இந்த பாவப்பட்ட எளிய மனிதனுக்குள் எவ்வளவு பெரிய தியாக உள்ளம்! தீர்ககமான நம்பிக்கை!! ஒரு பிள்ளையை வைத்துக்கொண்டு அதற்கு நல்லது கெட்டது செய்ய 30,32 வயதிலேயே நாமெல்லாம் படாதபாடு படுகிறோம். ஆனால் 65 வயதிலும் யாரோ பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற வேண்டுமென்ற அவரோட உறுதி. இந்த படிக்காத ஒரு சாமானிய மனிதனுக்கு தோன்றிய எண்ணம், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மெத்த படித்த கோடீஸ்வர பண்க்காரர்களுக்கும் தோன்றியிருந்தால், இந்த உலகில் "ஏழை,அனாதை" என்ற சொல் கூட இருந்திருக்காதுல்ல??? எப்படியோ தூங்கிப்போனேன்.
சில வாரங்கள் ஓடி முடந்தது, எதிர்பாராத நிகழ்வுகள், கடன் பட்ட சூழல் என என்னை மறுபடி வெளிநாடு செல்ல எண்ணம் கொள்ளச்செய்தது. இதைப்பற்றி தாத்தாவிடம் ஏற்கனவே சொல்லியிருந்தேன். "நல்லபடியா போயிட்டு வா ரொம்ப நாள் அங்க இருந்திடாதே உன்னுடைய பிரச்சினைய முடிச்சிட்டு வந்து மனைவி மகளோடு சந்தோசமா இரு னு சொன்னார்.
இப்போது முழு முடிவெடுத்து வெளிநாடு கிளம்ப நாள் நெருங்கியது, எல்லாரிடமும் பயணம் சொல்லியாச்சு, ரெண்டு நாளா தேடுறேன் தாத்தாவ மட்டும் காணலை,,,, நேரா வீட்ல போயி பாக்கலாம்னு போனேன். வீடு பூட்டியிருந்தது,, பக்கத்தில விசாரித்ததில் அவங்களுக்கும் ஏதும் தெரியல, எங்கே போயிருப்பாங்க? என்னவாயிருக்கும்? ஒண்ணும் தெரியல,,,,,!!!!
வைரமுத்து சார் சொல்வதைப்போல "எல்லா கடவுளுக்கும் பிள்ளை இருக்குதோ இல்லையோ,, ஆனா எல்லா பிள்ளைகளுக்கும் கடவுள் இருக்கிறது தாய் உருவத்தில்"
அதே போல இந்தப்பிள்ளைகளுக்கும் கடவுள் உண்டு, ஊமையன் ஐயா உருவில் என்ற நம்பிக்கையோடு,,,,, அவரிடம் சொல்லாமலே வந்துவிட்டேன்.
நன்றி!
நேத்தா.
25.01.2015.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக